சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 38,640-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 24) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 விலை அதிகரித்து ரூ. 38,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்று (ஆகஸ்ட் 25) இரண்டாவது நாளாகச் சவரனுக்கு ரூ200. அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ. 25 அதிகரித்து ரூ. 4,830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 38,640க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை இன்று சவரனுக்கு ரூ. 1.60 அதிகரித்து ரூ. 488.80க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து ரூ. 61.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மோனிஷா
ஒரே நாளில் ரூ. 472 குறைந்தது தங்கம்!
