சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைந்து விற்பனை

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த நிலையில் இன்று (ஜனவரி 30)  ரூ.7,600 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.20,000 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. ஆனால் இந்த விலை சரிவு என்பது தற்காலிகமானது தான் மீண்டும் விலை உயரும் என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.600 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.350 வரை குறைந்து ரூ.15,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்து ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை 

ADVERTISEMENT

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ. 10 குறைந்து ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி இன்று ஒரே நாளில் ரூ.20,000 சரிந்து ரூ. 4,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
29-1-2026 1,34,400
28-1-2026 1,24,880
27-1-2026 1,19,680
26-1-2026 1,20,200
25-1-2026 1,18,000
24-1-2026 1,18,000
23-1-2026 1,16,400
22-1-2026 1,13,600
21-1-2026 1,15,320
20-1-2026 1,11,200
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
29-1-2026 425
28-1-2026 400
27-1-2026 387
26-1-2026 375
25-1-2026 365
24-1-2026 365
23-1-2026 345
22-1-2026 340
21-1-2026 345
20-1-2026 340
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share