கோத்ரேஜ் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு: ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் தொழிற்சாலை துவங்கும் போது பெண்களுக்கு 50 சதவிகிதம் மற்றும் பால் புதுமையினருக்கு 5 சதவிகிதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு ஒப்பந்தம் செய்ததாக கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஜனவரி 7) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கோத்ரேஜ்  நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு செய்துள்ளது.

மாநாட்டில் கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா பேசும்போது, “இந்தியாவில் சுதந்திர போராட்ட சுதேசி காலகட்டத்தில் கோத்ரேஜ் நிறுவனம் தொடங்கப்பட்டது. கோத்ரேஜ் குழும தலைவர், அர்தேஷிர் கோத்ரேஜ் இந்த தொழிலை துவங்கிய போது சில சறுக்கல்கள் இருந்தது.

தற்போது, இந்தியாவின் முக்கியமான சோப்பு தொழிற்சாலையாக நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மார்க்கெட்டுகளில் அதிகமாக விற்பனையாகும் சிந்தால் சோப் எங்களுடைய நிறுவனத்துடையது தான்.

செங்கல்பட்டில் எங்களது புதிய தொழிற்சாலையை அமைக்க இருக்கிறோம் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,

இந்த நிறுவனத்தில் 50 சதவிகித பெண்கள் மற்றும் 5 சதவிகித பால் புதுமையினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதற்காக அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்தேன்” என்று நிஷாபா தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

டெல்லி குடியரசு தின விழாவில் கோவை பழங்குடியின தம்பதி: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share