கிச்சன் கீர்த்தனா : கோதுமைப் புட்டு!

By Kavi

|

Published on 11 Jul 2023, 6:35 AM

கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று புட்டு. பெரும்பாலும் அரிசியில் செய்யப்படும் புட்டைப் போன்று கோதுமையிலும் செய்து அசத்தலாம். இந்த கோதுமைப் புட்டில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, உணவு எளிதில் செரிமானமாக உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள் நோய்க் கிருமிகளிடமிருந்து காக்கும். தேங்காய்த் துருவல் மற்றும் நெய், குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

முழுக் கோதுமை,

தேங்காய்த் துருவல்,

ADVERTISEMENT
நாட்டுச் சர்க்கரை (அ) சர்க்கரை,

நெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

வாணலியில் சிறு தீயில் படபடவென்று பொரியும் வரை கோதுமையை வறுத்தெடுக்கவும். ஆறிய பின்பு, மிக்ஸியில் பவுடராக அரைத்துச் சலிக்கவும். மீதமுள்ள குருணையை மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைத்துச் சலிக்கவும். இப்படியாக நான்கைந்து முறை செய்து, புட்டு மாவு தயார் செய்யவும். பிறகு, புட்டு மாவில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கிளறவும். இதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கலக்கவும். மாவைக் குழிக் கரண்டியில் எடுத்து, இட்லித் தட்டில் மெதுவாகத் தட்டவும். இட்லி போல உடையாமல் விழ வேண்டும். பிறகு, ஆவியில் நன்றாக வேக வைத்து எடுத்தால், கோதுமைப் புட்டு ரெடி.

தினை அடை

சண்டே ஸ்பெஷல்… சப்பணமிட்டுச் சாப்பிடுவோமா?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel