GOAT படத்தின் டிரைலர் அப்டேட் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் உள்ளது.
இதுவரை இந்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியான நிலையில் டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் ரசிகர்கள் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரிடம் டிரெய்லர் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் ‘உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் GOAT டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
அதில், “GOAT டிரெய்லர் அப்டேட் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும். ????❤️ நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்” என வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார்.
இதனையடுத்து GOAT டிரைலர் வரும் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆவதை அர்ச்சனா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
அதேவேளையில் ’அப்டேட்க்கு ஒரு அப்டேட் ஆ?’ என அவர் மீது செல்லமாக விஜய் ரசிகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள GOAT திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா