அண்ணே வராரு வழி விடு… GOAT டிரெய்லர் எப்படி?

Published On:

| By Minnambalam Login1

GOAT trailer vijay

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த GOAT திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(ஆகஸ்ட் 17) மாலை 5 மணிக்கு வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 21 வருடங்களுக்கு பின் விஜய் நடிக்கும் படத்திற்கு , இரண்டாவது முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதற்கு முன் 2003-இல் விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’ திரைப்படத்திற்குத் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

“அண்ணே வராரு வழி விடு” என்ற வசனத்துடன் தொடங்கும் டிரெய்லர், முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. விஜய்க்கு ஜோடியாகச் சினேகா நடித்துள்ளார். இந்த படத்தில்  இன்டலிஜன்ஸ் ஆபிசராக வரும் விஜய் கதாபாத்திரத்துக்கு ‘காந்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு மகனாக விஜயே நடித்துள்ளார். மகன் விஜய்யை இளமையாகக் காட்டுவதற்கு AI, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயண்படுத்தியுள்ளார்கள். வில்லனாக ‘மைக்’ மோகன் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

வெங்கட் பிரபு தன்னுடைய டிரேட்மார்க் காட்சிகளை இந்த படத்திலும் வைத்துள்ளார். உதாரணமாக டிரெய்லரின் ஆரம்பத்தில் வரும் “ 68 இன்டர்நேஷ்னல் சக்சஸ்புல் ஆபரேஷன்”, கடைசியில் வரும் “ மருத மலை மாமணியே முருகையா” போன்ற காட்சிகள், விஜய் இதுவரை நடித்துள்ள படங்கள் மற்றும் ‘கில்லி’ படத்தை ஞாபகப்படுத்துகிறது.

விஜய் மற்றும் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு செம்மையான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் இந்தப் படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

‘கல்கி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திரம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share