GOAT & அமரன் ஒரே மாதத்தில் ரிலீஸ்?

Published On:

| By Kavi

மாவீரன், அயலான் என இரண்டு வெற்றி படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21 வது படமான அமரன் படத்தில் நடித்து உள்ளார்.

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமரன் படத்தை தயாரித்துள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 75 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. அதன் பிறகு படத்தின் மற்ற காட்சிகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படம் ஆக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அதற்கு முந்தைய வார வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27ஆம் தேதி படத்தை வெளியிட அமரன் படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி செப்டம்பர் 5ஆம் தேதி நடிகர் விஜய்யின் “The GOAT” திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை கோட் படத்திற்கு எதிர்பார்ப்பதை விட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தால், அமரன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: முகச் சுருக்கங்களைப் போக்க… உங்களுக்கான ஈஸி ஃபேஸ் பேக் இதோ!

டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி முதல் இந்தியன் 2 அப்டேட் வரை!

ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share