கோவாவில் சமூக ஆர்வலரான நமன் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளார். இது அனைத்து குடும்பத்திலும் பின்பற்றப்படும் நடைமுறை தானே என்று நீங்கள் கேட்டால், கோவாவில் அப்படி இல்லை என்பது தான் கள யதார்த்தம்.
கோவாவில் ஆண் குழந்தைகள் பெற்றெடுப்பதை உயர்ந்த சமூக மதிப்பீடாகவும் பெண் குழந்தைகள் பெறுவதை தாழ்வாகவும் இழிவாகவும் கருதும் பழமைவாத மனநிலை அம்மக்களிடையே பல ஆண்டுகளாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சங்கீதா நாயக் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் 2019 -21 தரவுகளின் படி கோவாவில் 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 1000 ஆண் குழந்தைகளுக்கு 774 பேர் மட்டுமே உள்ளனர். பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் உள்ளனர். இதுகுறித்து ஏன் எந்த விவாதங்களும் எழவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார்.
பேராசிரியர் பிரஷாந்தி தல்பால்கர் கூறும்போது, “கோவா கல்வியறிவில் உயர்ந்த மாநிலமாக இருந்தாலும் பாலின ஒடுக்குமுறை அதிகளவில் உள்ளது. இந்த ஒடுக்குமுறை கோவாவில் மட்டும் நடப்பதில்லை.
இந்தியா முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. கோவாவில் மிகவும் பழமைவாதமான நடைமுறைகள் உள்ளது. ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக ‘பெட்டர் லக் நெக்ஸ் டைம்’ என்று ஆறுதல் கூறுகிறார்கள். இந்த நடைமுறைகளிலிருந்து கோவா மக்கள் வெளிவர வேண்டும். இதற்கான தகுந்த நடவடிக்கையும் விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மகள் இயக்கும் ’லால் சலாம்’: சம்பளத்தில் கறாராக இருக்கும் ரஜினிகாந்த்
Comments are closed.