நூற்றுக்கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான க்ரீம்கள், லோஷன்கள், அழகு நிலையங்களில் பலவிதமான அழகு சிகிச்சைகள் என்று மெனக்கெட்டால் மட்டுமே சருமம் மிளிர்ந்து விடாது. நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவும் நம்முடைய புற அழகுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. அவற்றில் ஒன்று இந்த க்ளோ ஸ்கின் லட்டு. இந்த லட்டு சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும் பலம் கொடுக்கும்.
என்ன தேவை?
சத்து மாவு – ஒரு கப் (கடைகளில் ரெடிமேட்டாகக் கிடைக்கும்)
வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)
நெய் – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு – சிறிதளவு
பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு – சிறிதளவு
பொடியாக நறுக்கிய உலர்திராட்சை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவு, கம்பு, சோளம், ராகி, திணை, சாமை என்று எல்லாமே கலந்த சத்து மாவை வாங்கிக்கொள்ளவும். பின்னர் சத்து மாவு, பொடித்த வெல்லம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் உலர் திராட்சையையும், பருப்புகளையும் சேர்த்துக் கலக்கவும். நெய்யைச் சூடாக்கி அதை இந்த மாவுக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டே மாவை லட்டுகளாகப் பிடிக்கவும். வெல்லமும் நெய்யும் சேர்ந்து ஈரத்தன்மை கொடுப்பதால் தண்ணீரோ, பாலோ கலக்காமல் இந்த லட்டுகளைச் செய்ய முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் சாம்பார்
கிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா
எதுக்கு அந்த ஆண்கள் தினம்? : அப்டேட் குமாரு
அதிமுகவிடம் 100 கோடி கேட்ட கட்சி எது? : திண்டுக்கல் சீனிவாசன் பதில்!