இந்த வருடத்துக்கான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) என்ற நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல்களை வெளியிட்டன. அதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சில மாடல்களில் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6 முக்கிய இடம்பெற்றது. அதேபோல், மேலும் சில நிறுவனங்களின் மாடல்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. அதில் LG நிறுவனத்தின் புதிய மாடலான G6 என்ற பர்மியம் மாடலும் ஒன்று. ஏனெனில், இதில் வழங்கியுள்ள மல்டி டாஸ்கிங் (multi-tasking) வசதி பெரும்பாலான நபர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18:9 என்ற ரேசியோவில் திரையானது இரண்டு டாஸ்க்குகளை ஒரே நேரத்தில் செய்யும்விதத்தில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கனவே gionee நிறுவனத்தின் மாடல்கள் வெளியாகியிருந்தன. அதில் நாம் ஒரு வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே மெசேஞ்சர்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் LG நிறுவனத்தின் சில மாடல்களிலும் ஏற்கனவே இந்த மல்டி டாஸ்க்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதி புதிதாக வழங்கப்படவில்லை என்றாலும், சிறப்பம்சம் என்று இதைக் குறிப்பிட்டு கூறியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்த மாடலின் வெளியீட்டு நாளில் தெரியவரும்.