டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக க்ளென் மேக்ஸ்வெல் இன்று (ஜூன் 2) அறிவித்தார். glen maxwell announce retired from odi
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக க்ளென் மேக்ஸ்வெல் கருதப்படுகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் மேக்ஸ்வெல்.
அதன்பின்னர் சுமார் 13 ஆண்டுகாலம் மொத்தம் 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை வென்ற அணிகளிலும் முக்கிய வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார்.
ஒரு அதிரடியான பேட்ஸ்மேனாக 33.81 சராசரி மற்றும் 126.70 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார் மேக்ஸ்வெல்.
கடந்த 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 201குவித்தது, அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சிறந்த இன்னிங்ஸாகக் கருதப்படுகிறது. இதுதவிர 4 சதங்களையும் 23 அரைசதங்களையும் அடித்தார்.
அதே போன்று பந்துவீச்சில், ஆஃப் ஸ்பின்னரான மேக்ஸ்வெல் இதுவரை 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 4 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் சிறந்த பீல்டரான இவர் இதுவரை 91 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
ஒரு பந்து வீச்சாளராகவும், அவர் ஒரு திறமையான ஆஃப் ஸ்பின்னராக இருந்தார், தனது வாழ்க்கையில் நான்கு முறை நான்கு ஃபெர்களை எடுத்தார். ஒரு சிறந்த ஃபீல்டராக, அவர் இந்த வடிவத்தில் 91 கேட்சுகளையும் வைத்துள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து ஃபைனல் வேர்டு பாட்காஸ்டில் மேக்ஸ்வேல் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதில் நான் பெருமைப்படுகிறேன். எனக்கு இது போதும் என நினைக்கின்றேன். காயம் காரணமாக பலமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டு, பின் மீண்டும் சேர்க்கப்பட்டேன்.
உலகக் கோப்பைகளில் சிறந்த ஆஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனது உடல் களத்தில் எப்படி செயல்படுகிறது என்பதைக் கணித்தே ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பைக் கருத்தில் கொண்டு மேக்ஸ்வெல் இந்த முடிவை எடுத்ததாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “ஒருநாள் ஆட்டத்தின் மிகவும் துடிப்பான வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் அறியப்படுவார். அவர் ஆஸ்திரேலியாவின் இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் வேறு தனித்து நிற்கின்றன.
அதிர்ஷ்டவசமாக, டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் இன்னும் நிறைய வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பையை நோக்கி நாம் முன்னேறும்போது அடுத்த 12 மாதங்களில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்” என பெய்லி தெரிவித்துள்ளார்.