பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது என்று அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 17) தெரிவித்துள்ளார். gk mani says trouble in pmk
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (மே 16) திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர். இரண்டாவது நாளாக இன்று பாமக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், ராமதாஸ், அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, “உட்கட்சிக்குள் சில சலசலப்பு பிரச்சனைகள், நெருக்கடிகள் வருவது இயல்பு தான். அந்தவகையில், பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. gk mani says trouble in pmk
பாமக என்பது ஒரு குடும்ப பாசத்துடன் இருக்கக்கூடிய கட்சி. அதனால் சிறிய அளவில் நெருக்கடி ஏற்பட்டால் கூட, மிக விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ராமதாஸிடம் நேற்று இரவு வரை நான் பேசினேன். அன்புமணியிடம் நேற்று இரவும் இன்று காலையிலும் பேசினேன். இருவரும் விரைவில் சந்திப்பார்கள். ஒரு சுமூகமான தீர்வு காண தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலை பாமக வலிமையாக எதிர்கொள்ளும். பாமக இடம்பெறும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.