பாமகவில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 30) தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது பற்றி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,
“எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. மிகவும் மன உளைச்சலாகவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் இருக்கிறோம். gk mani says some problems in pmk
பாமக என்பது பலமான கட்சி, தனித்தன்மையோடு இருக்கிற கட்சி. கொள்கையோடும் லட்சியத்துடனும் இருக்கிற கட்சி. பாமகவில் நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதால் மிகுந்த வேதனையுடன் இருக்கிறோம்.
இந்த பிரச்சனை மீண்டும் சீராக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறோம். பழைய நிலைமைக்கு குடும்ப பாசத்துடன், வலிமையான கட்சியாக வர வேண்டும். தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கட்சி வலிமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.