பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? – ஜி.கே.மணி ஓபன்டாக்!

Published On:

| By Selvam

GK Mani says rumour spread

பாமக தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்று பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 19) தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாவரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது குறித்து பேசுகையில் “மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு ராமதாஸ், மாவட்ட செயலாளர்களிடம் கையொப்பம் பெற்று அன்புமணியை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்போகிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. GK Mani says rumour spread

அதனால் பாமகவிற்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் தேவையற்றது. இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய சம்பவமாக நாங்கள் பார்க்கிறோம். அதனால் தான் பாமக மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அந்த சலசலப்பு மிக விரைவில் தீரும்.

அன்புமணி, ராமதாஸ் இடையேயான பிரச்சனை ஒரு நல்ல முடிவை எட்டக்கூடிய சூழலில் உள்ளது. இருவரும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். ராமதாஸ் காலத்திற்கு பிறகு பாமகவை வழிநடத்தக்கூடியவர் அன்புமணி தான். அதில் எந்த மாற்றமுமில்லை. அன்புமணியை முன்னிலைப்படுத்தி தான் நாங்கள் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார். GK Mani says rumour spread

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share