“45 வருடமாக பாமகவுக்காக உழைக்கும் நான், இந்தக் கட்சி சிதறிப்போக வேண்டும் என்று நினைப்பேனா?” என பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 31) தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதை சரிசெய்வதற்காக நாங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். gk mani says i am not the reason
ஊடகத்திலும், சமூக ஊடகத்திலும், ஒரு சில ஏடுகளிலும், எங்களது கட்சிக்காரர்களும் இந்த விரிசலுக்கு நான் தான் காரணம் என்று எழுதுகிறார்கள். அந்த செய்திகளை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அறையில் உட்கார்ந்து கண்ணீர் வடித்தேன். என்னை அவமானப்படுத்தி எழுதுவது தான் அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எழுதட்டும். 45 வருடமாக இந்த கட்சிக்காக உழைக்கும் நான், கட்சி சிதறிப்போக வேண்டும் என்று நினைப்பேனா?

நான் கட்சியை விட்டு விலகப்போவதாக சொல்கிறார்கள். கனவில் கூட அப்படியெல்லாம் நடக்காது. எந்த பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. ஒரே ஒரு முறை சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்பிறகு, ராமதாஸும் அன்புமணியும் தான் என்னை வற்புறுத்தி போட்டியிட வைத்தார்கள்.
ராமதாஸும் அன்புமணியும் விரைவில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். இது என்னுடைய ஆசை மட்டுமல்ல, பாமகவின் அனைத்து நிர்வாகிகளின் ஆசையும் இதுதான். அதற்கான நேரம் நிச்சயம் வரும்.
பொறுப்பாளர்கள் யாரையும் மாற்ற வேண்டாம் என்று ராமதாஸிடம் நேற்று நான் வலியுறுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை.
நேற்று மட்டும் தான் அன்புமணியிடம் பேசவில்லை. தொடர்ந்து அவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டே தான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். gk mani says i am not the reason