தமிழகத்தில் இதுவரை மகளிர் உதவித்தொகை பெறாத பெண்களுக்கு மொத்தமாக ரூபாய் 50,000 வழங்கிடுமாறு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். ‘Give 50k to women who don’t receive magalir urimai thogai’ – Annamalai
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது விடுபட்ட தகுதியுடைய பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் கலந்துரையாடியபோது, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் மகளிர் உரிமைத்தொகை வேண்டி, அதிக மனுக்கள் வந்துள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது
தனது எக்ஸ் வலைதள பதிவில், “தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு. முன்பு தகுதி இல்லை எனக் கூறி நிராகரித்த நிலையில், இப்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என நமது சகோதரிகள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிக் கொடுக்க திமுக அரசு முடிவு செய்தாலும் தமிழக பெண்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறையப் போவதுமில்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.
அப்படி உண்மையில் திமுக மனம் திருந்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்பினால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும். அதுதான், திமுக அரசால் ஏமாற்றப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் நியாயமாக அமையும்.” என குறிப்பிட்டுள்ளார்.
