சிறுமிக்கு கூல் டிரிங்க்ஸில் மதுபானம் கலந்துகொடுத்து பாலியல் தொல்லை : அதிர்ச்சி தகவல்!

Published On:

| By Kavi

Girl sexually assaulted

காஞ்சியில் பள்ளி சிறுமி, அவரைக் காட்டிலும் சிறிய வயதுடைய மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.irl sexually assaulted

 காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள் 10ஆம் வகுப்பை முடித்துவிட்டு, விடுமுறை நாட்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.

ADVERTISEMENT

தற்போது 11ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார். இவருக்கு களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 8,9 ஆம் வகுப்புகள் படிக்கும் இரு மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மூன்று பேரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்தசூழலில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி இந்த மாணவர்கள் இருவரும் மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அஜய் வேலைவெட்டி இல்லாத நபர். இந்தநிலையில் தான் அஜயுடன் சேர்ந்த இரு மாணவர்களும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

10ஆம் தேதி மாலை மாணவிக்கு கூல் டிரிங்க்ஸில் மது கலந்துகொடுத்துள்ளனர். இதை குடித்து பார்த்த சிறுமி கூல் டிரிங்க்ஸ் நல்லாவே இல்லை. எதோ மாதிரி இருக்கிறது என குடிக்க மறுத்திருக்கிறார்.

ஆனால் இது மார்க்கெட்டுக்கு வந்த புதுவகையான கூல் டிரிங்க்ஸ் என கூறி மாணவியை குடிக்கவைத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் லேசாக மயக்கமடைந்த சிறுமியை  களக்காட்டூர் யூனியன் வங்கிக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். Girl sexually assaulted

இதை அந்த வழியே சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்த நிலையில், அங்கிருந்து மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி தானாகவே எழுந்து தட்டுத்தடுமாறி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி மயக்கம் என உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது அம்மா என்ன சாப்பிட்ட… என்ன நடந்தது என விசாரிக்க, அச்சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனைக்காக மாணவி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தசூழலில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட அஜய் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் நேற்று (ஜூன் 12) கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் என்பதால், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். 

அஜய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரில் இரண்டு பேர் மாணவியை விட சிறிய வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில் ,பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள் கூறுகின்றன.

அதாவது, 2023 இல் 4,581 ஆக இருந்த வழக்குகள் 2024 இல் 6,975 (52.3%)ஆக அதிகரித்துள்ளன. Girl sexually assaulted

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share