கேரள மாநிலம் கண்ணூரில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதி பெற்றோரை இழந்த உறவுக்கார சிறுமியை சொந்த மகள் போல பாசம் கொட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்த்துள்ளனர். இதற்கிடையே, குழந்தை பிறந்ததால், தன் மீது பாசம் குறைந்த விட்டதாக அந்த சிறுமி உணர தொடங்கியுள்ளார். இதனால், கைக்குழந்தை மீது பொறாமை ஏற்பட்டுள்ளது.girl killed uncle’s newborn child
இந்த குழந்தையால்தான் தனக்கு வீட்டில் முக்கியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிறுமி கருத தொடங்கியுள்ளார். இதன் காரணமாக குழந்தையை கொன்று விடவும் முடிவு செய்துள்ளார். கடந்த திங்கட் கிழமை இரவு பெற்றோருடன் 4 மாத குழந்தை உறங்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, யாருக்கும் தெரியாமல் குழந்தையை எடுத்து பக்கத்திலுள்ள கிணற்றில் வீசிவிட்டார். இதில், குழந்தை பரிதாபமாக இறந்து போனது. girl killed uncle’s newborn child
பெற்றோர் குழந்தையை தேடி அலைந்துள்ளனர். பின்னர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தீவிர விசாரணையில் குழந்தையை கிணற்றில் தூக்கி வீசியதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுமி அடைக்கப்பட்டுள்ளார்.girl killed uncle’s newborn child
இது குறித்து , கண்ணூர் போலீசார் கூறுகையில், தமிழகத்தில் பெரம்பலூரை சேர்ந்த இளைஞரின் மூத்த சகோதரரின் மகள்தான் அந்த சிறுமி. அவரின் சகோதரர் இறந்து போனவுடன் சிறுமியின் தாய் அனாதரவாக விட்டு விட்டு சென்று விட்டார். சிறுமி ஆதரவற்ற நிலையில் தவிப்பதை கண்ட அந்த இளைஞர் தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். கடைசியில், சிறுமி பொறாமை காரணமாக தனது சின்ன சகோதரியை கொலை செய்து விட்டார். சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு மேற்கொண்டு தகவல்கள் தெரிவிக்க விரும்பவில்லை’ என்கின்றனர்.