தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகே தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். இவர் ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருந்தார். நேற்றிரவு (மார்ச் 2) சக மாணவிகளுடன் சேர்ந்து இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. girl died take alcohol
இதனால், அந்த பெண்ணுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சக மாணவிகள், பதறியபடி அனிதாவை கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.girl died take more alcohol
தகவல் அறிந்து சென்ற கேளம்பாக்கம் போலீஸார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், போதைக்காக அதிகளவில் மது குடித்ததால், இறப்பு நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக பெண்கள், மாணவிகள் அதிகளவில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உயிரிழப்புகளும் சர்வசாதாரணமாக நடக்கிறது.