“வெளிநாட்டுல படிக்கணும்னா கோடிகளில் செலவாகுமே… நம்மளால முடியுமா?” என்று மலைத்துப்போகும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு, ஒரு சொர்க்கபூமி என்றால் அது ஜெர்மனிதான்! காரணம், அங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் (Tuition Fee) கிட்டத்தட்ட ஜீரோ.
2026ஆம் கல்வி ஆண்டில் ஜெர்மனியில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கான புதிய விசா வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, கனடாவை விடக் குறைந்த செலவில், உலகத் தரமான கல்வியைப் பெற நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ.
ஏன் ஜெர்மனி பெஸ்ட்?
- இலவசக் கல்வி: அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் கிடையாது. செமஸ்டருக்குச் சுமார் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே நிர்வாகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
- வேலைவாய்ப்பு: படிக்கும்போதே பகுதிநேர வேலை (Part-time) பார்க்கலாம். படிப்பு முடிந்ததும் 18 மாதங்கள் வரை தங்கி வேலை தேட அனுமதி (Post-Study Work Visa) உண்டு.
விசா வகைகள் என்ன? மாணவர்களுக்குப் பிரதானமாக இரண்டு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன:
- மாணவர் விசா (Student Visa): ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்துவிட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் விசா (Student Applicant Visa): அட்மிஷன் கன்ஃபார்ம் ஆகவில்லை, ஆனால் என்ட்ரன்ஸ் எழுதவோ அல்லது நேர்காணலுக்கோ செல்கிறீர்கள் என்றால் இந்த விசா பயன்படும்.
முக்கியமான நிபந்தனைகள்: விசா வாங்குவது அவ்வளவு ஈஸி இல்லை. சில முக்கிய டாக்குமென்ட்ஸ் கையில் இருக்க வேண்டும்.
- APS சான்றிதழ் (முக்கியம்): இந்திய மாணவர்களுக்கு இது கட்டாயம். உங்கள் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவைதானா என்பதை உறுதி செய்யும் ‘Academic Evaluation Centre’ சான்றிதழ் இல்லாமல் விசா விண்ணப்பிக்கவே முடியாது.
- பிளாக் அக்கவுண்ட் (Blocked Account): நீங்கள் ஜெர்மனியில் தங்குவதற்கான செலவுப் பணம் உங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க, ஜெர்மன் வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். (தோராயமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை தேவைப்படலாம்).
மொழித் திறன்: ஆங்கில வழியில் படிக்கச் செல்கிறீர்கள் என்றால் IELTS அல்லது TOEFL ஸ்கோர் தேவை. ஜெர்மன் மொழியில் படிக்க நினைத்தால், அதற்கான (B1/B2 Level) சான்றிதழ் அவசியம்.
ஜெர்மனி போறதுக்கு மத்ததெல்லாம் ரெடி பண்ணிடுவீங்க… ஆனா இந்த APS சான்றிதழ் வாங்குறதுலதான் பலரும் சொதப்புறாங்க. அப்ளை பண்ணிச் சான்றிதழ் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம். அதனால, காலேஜ் அப்ளிகேஷன் போடுறதுக்கு முன்னாடியே APS-க்கு அப்ளை பண்ணிடுங்க. அப்புறம், கொஞ்சம் ஜெர்மன் மொழி கத்துக்கிட்டுப் போனா, பார்ட் டைம் வேலை ஈஸியா கிடைக்கும் பாஸ்!
