ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஏப்ரல் 3-க்கு ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகா தேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தமாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளார்.

இடைக்காலமாக கட்சியில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருக்க வேண்டும். இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டிருக்க முடியாது.

ADVERTISEMENT

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “சட்டமன்றத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தினோம். உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்துவிட்டது.

எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்பது உறுதியாகிறது.

ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் என் பக்கத்தில் அமர்வதால் மற்றவர்களிடம் ஆலோசனை நடத்த முடியவில்லை. அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

கட்சி சாராத உறுப்பினராக ஓ.பன்னீர் செல்வத்தை கருத வேண்டும். குறிப்பிட்ட நாளை ஒதுக்கி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!

கலாஷேத்ரா பாலியல் புகார்: மாணவிகள் முதல்வருக்கு கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share