இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்? : கங்குலி ரியாக்சன் என்ன?

Published On:

| By Selvam

Gautam Gambhir – Sourav Ganguly: 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து செய்திகள் வெளியாகிய நேரத்தில் இருந்தே இந்த பதவிக்கு ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பான்டிங், ஜஸ்டின் லாங்கர் என பல பெயர்கள் எதிரொலித்த நிலையில், அவர்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

இந்த தகவலுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் இருந்த கவுதம் கம்பீர், தற்போது இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் கவுதம் கம்பீர் கலந்துகொண்டார்.

அப்போது, அவரிடம் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “இந்த கேள்விகளுக்கு இதுவரை யாருடனும் எந்தவொரு பதிலையும் தெரிவித்ததில்லை. ஆனால், உங்களிடம் அது குறித்து மனம் திறந்து பேச வேண்டும் என எண்ணுகிறேன்.

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நான் விரும்புகிறேன். உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியாளாராக செயல்படுவதை விட மிகப்பெரிய மரியாதை எதுவும் இல்லை”, என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கவுதம் கம்பீரின் இந்த விருப்பம் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி,

“அவர் (கவுதம் கம்பீர்) இந்திய அணிக்கு பயிற்சியளிக்க விருப்பப்பட்டால், அந்த பொறுப்புக்கு அவர் ஒரு சிறந்த தேர்வு என நான் கருதுகிறேன்”, என தெரிவித்துள்ளார்.

இதனால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முன்னதாக, கம்பீரின் வழிகாட்டுதலில் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிவகார்த்திகேயன் தயாரித்த ’குரங்கு பெடல்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

நாடாளுமன்ற தேர்தல் : தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வாக்கு எண்ணும் மையத்திற்கு காலையிலேயே சென்ற திருமாவளவன், கார்த்தி சிதம்பரம்

SA vs SL : தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share