திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று (மார்ச் 30) வாக்கு சேகரித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
அதன்படி இன்று அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
காலையில் விருபாட்சிபுரம், பாகாயம் பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து தொரப்பாடி, பென்னாத்தூர் பேரூர், கணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார்.
விருபாட்சிபுரம் பகுதியில் அவர் பேசுகையில், “மத்திய பாஜக அரசு கேஸ், பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 அளவிற்கு கேஸ் விலை உயரும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி நல்லாட்சியை தர மத்தியிலே இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மாலையில் கருகம்பத்தூர், அப்துல்லாபுரம், செம்பேடு, சதுப்பேரி, தெள்ளூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு திரளாக பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாக்டர் கிருஷ்ணசாமி Vs ஜான் பாண்டியன்…தென்காசியைக் கைப்பற்றப்போவது யார்?
“ஆளுநர்கள் அரசியலமைப்புபடிதான் செயல்பட வேண்டும்”: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா