சுப்மன் கில் தன்னுடைய கேப்டன்சியில் வீரர்களை எப்படி கையாள வேண்டுமென்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அறிவுரை வழங்கியுள்ளார். Gary Kirsten gave advise to gill
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது அதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என தொடரில் பின்தங்கியுள்ளது.
தோல்வியடைந்த இரு போட்டிகளிலும் வெற்றிக்கு மிக அருகில் வந்தும், வெற்றியை பெற முடியாமல் போனது சுப்மன் கில் கேப்டன்சி மீது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் தனிப்பட்ட முறையில் ஒரு பேட்ஸ்மேனாக 3 சதங்கள் உட்பட 600 ரன்களுக்கு மேல் கில் குவித்துள்ள போதும், கேப்டனாக அவர் தடுமாறி வருகிறார் என முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
3வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் மீது குற்றத்தை சுமத்தும் வகையில் பேசிய சுப்மன் கில்லை ரவிசாஸ்திரி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் சுப்மன் கில்லுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

மனித மேலாண்மையில் தோனி தான் பெஸ்ட்!
அவர் கூறுகையில், “இது சுப்மன் கில்லுக்கு ஆரம்ப நாட்கள். அவரிடம் சிறந்த ஆற்றல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் கேப்டன் பதவியில் நீங்கள் ஒன்றிணைக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
கில் விளையாட்டில் ஒரு சிறந்த சிந்தனையாளராக இருக்கிறார், அவரால் கேப்டன் பதவியிலும் ரன்களை அடிக்க முடிகிறது. அவர் ஒரு நல்ல வீரர். ஆனால் தலைமைத்துவத்தில் நீங்கள் மனிதர்களை கையாள தெரிந்திருந்தால் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என்று நான் நினைக்கிறேன்.
மனித மேலாண்மையில் தோனியை விட சிறந்து விளங்கியவரை நான் பார்த்ததில்லை. தோனியின் கேப்டன்ஸி நுணுக்கங்களை பின்பற்றினால், இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் சுப்மன் கில்லுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஒரு வீரராக கம்பீரை மிகவும் பிடிக்கும்… ஆனால்,
மேலும் தற்போதைய பயிற்சியாளர் கம்பீர் குறித்து கூறுகையில், “பயிற்சியாளர் கம்பீரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒரு வீரராக கம்பீரை மிகவும் பிடிக்கும். அவரிடம் எப்போது போராட வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அவர் மிகவும் வலிமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு ஒரு ஆளுமை இருக்கிறது, அவருக்கு ஒரு ஸ்டைலும் இருக்கிறது. ஆனால் அந்த ஆளுமையும் ஸ்டைலும் இந்திய வீரர்களுடன் இணைகிறதா? என்பது தான் முக்கியமானது” என கிர்ஸ்டன் தெரிவித்தார்.n gave her opinion
n gave her opi Kirsten gave her opinion
