கருடன் : சூரியின் மிரட்டல் நடிப்பு..! டிரைலர் எப்படி..?

Published On:

| By indhu

விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் கருடன்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் துரை செந்தில்குமார் தான் கருடன் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி இருக்கிறார்.

லார்ட் ஸ்டூடியோ மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

வரும் மே 31ஆம் தேதி கருடன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது.

சசிகுமாரும் மற்றும் உன்னி முகுந்தன் ஆகிய இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்க, உன்னி முகுந்தனுக்கு விசுவாசமான வேலைக்காரராக சூரி நடித்திருக்கிறார். தனது முதலாளி மேல் சூரி வைத்திருக்கும் விசுவாசத்தினால் சூரியின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் அந்த பிரச்சனைகளை சூரி எப்படி சமாளித்தார் என்பதே இந்த படத்தின் ஒன் லைன்.

Garudan - Trailer | Soori, Sasikumar, Unni Mukundan | Yuvan | Vetrimaaran | RS Durai Senthilkumar

“நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா.. கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்று டிரைலரின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம் கருடன் படத்தின் கதையை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

டிரைலர் முழுக்கவே பல அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது. டிரைலரின் முடிவில் கையில் பெரிய அருவாளுடன் சூரி நிற்கும் காட்சி செம மிரட்டல்.

விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடித்ததற்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு கருடன் படத்திற்கும் மக்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூலி : பாலிவுட் நடிகர் தேடலில் லோகேஷ் கனகராஜ்

வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share