ஓடிடியில் வெளியான “கருடன்”

Published On:

| By indhu

“கருடன்” திரைப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (ஜூலை 3) வெளியாகி உள்ளது.

“எதிர் நீச்சல்”, “காக்கிச் சட்டை”, “கொடி”, “பட்டாசு” போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் “கருடன்”.

ADVERTISEMENT

இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“கருடன்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, “கருடன்” படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.

ADVERTISEMENT

ரூ.20 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்தது.

இந்நிலையில் இப்படம் இன்று (ஜூலை 3) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், படத்தை சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும் காண முடியும்.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உ.பி. ஆன்மீகக் கூட்டத்தில் நெரிசல் : 116 பேர் பலி… போலே பாபா தலைமறைவு!

பாம்பன் பணிகளை துரிதப்படுத்த ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பி கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share