கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கரம் மசாலா, கறி மசாலா… எது பெஸ்ட்?

Published On:

| By Selvam

கடைகளில் விற்கப்படும் கரம் மசாலா, கறி மசாலா இரண்டும் ஒன்றா… வேறு வேறு என்றால் எதை, எந்தச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி இல்லத்தரசிகளுக்கு உண்டு. இதற்கான பதில் என்ன?

“கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான். கடைகளில் இரண்டுக்கும் தனித்தனி பொடிகள் கிடைக்கின்றன.

கரம் மசாலாவில் மணமும் காரமும் சற்று குறைவாக இருக்கும். கறி மசாலாவில் அந்த இரண்டும் தூக்கலாக இருக்கும்.

எந்த உணவைச் சமைக்கிறோம், அதன் மணமும் காரமும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து இரண்டையும் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டையும் நாம் வீட்டிலேயே அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக தயாரித்துப் பயன்படுத்தினால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்” என்கிறார்கள் சமையற்கலைஞர்கள்.

கரம் மசாலா தயாரிக்க

காய்ந்த மிளகாய் – 10, தனியா (மல்லி) – ஒன்றே கால் டீஸ்பூன், பட்டை – 3 துண்டு, கிராம்பு – 15, அன்னாசிப்பூ – 2, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கல்பாசி – அரை டீஸ்பூன், பிரியாணி இலை – 2.

இவை எல்லாவற்றையும் வெறும் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் விடாமல் வாசம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் பொடித்துவைத்துக்கொண்டு, தேவைப் படும்போது பயன்படுத்தலாம்.

இதை பிரியாணி, குருமா, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா போன்றவை சமைக்கும்போது பயன்படுத்தலாம்.

கரம் மசாலாவைப் பொறுத்தவரை முதலிலேயே சேர்க்காமல், கடைசியில் சேர்த்தால்தான் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

மிதமாகச் சேர்க்க வேண்டும். அளவு கூடினால் உணவின் சுவையே மாறக் கூடும். அசைவ உணவுகளுக்கும் மசாலா தூக்கலான பிரியாணி மாதிரியான உணவுகளுக்கும் சுவையையும் மணத்தையும் கூட்டுவதே கரம் மசாலாவின் குணம்.

கறி மசாலா தயாரிக்க

காய்ந்த மிளகாய் – 20, தனியா (மல்லி) – ஒன்றரை டீஸ்பூன், சோம்பு- 1 டீஸ்பூன், பட்டை – 5 பெரிய துண்டு, கிராம்பு – 10, அன்னாசிப்பூ – 1, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கல்பாசி – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 5, பிரியாணி இலை- 1, கசகசா- ஒன்றரை டீஸ்பூன்.

இவை எல்லாவற்றையும் வெறும் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் விடாமல் வாசம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் பொடித்துவைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இதை மிக்ஸ்டு வெஜிடபுள், சிக்கன் ஃப்ரை, முட்டை குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி போன்றவை சமைக்கும் போது பயன்படுத்தலாம். குழம்பும் கிரேவியும் கெட்டியாக வரவும் இதைப் பயன்படுத்துவதுண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ்

கிச்சன் கீர்த்தனா: லைம் ரோஸ்ட் சிக்கன்

ஒருவேள வெளிநாடுனு நெனச்சிட்டாரோ : அப்டேட் குமாரு

ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share