அறிவுரை கூறிய காவலர் கொலை… கஞ்சா வியாபாரியை சுட்டுப்பிடித்த போலீஸ் – நடந்தது என்ன?

Published On:

| By vanangamudi

ganja seller ponvannan shot by madurai police

உசிலம்பட்டி அருகே போலீஸ்காரரை கொலை செய்த குற்றவாளி இன்று (மார்ச் 29) கேரளா தப்ப முயன்ற நிலையில், போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ganja seller ponvannan shot by madurai police

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த மார்ச் 27ஆம் பணி விடுப்பில் இருந்தார். அன்று முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றுள்ளார். அப்போது அதே பாரில் கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதைக் கண்டார்.

அவர்கள் பக்கம் சென்று, ‘டேய் என்ன இந்த ஏரியாவிலும் இப்போ கஞ்சா விக்க வந்துட்டீங்களா?, இனி அதெல்லாம் பண்ணக்கூடாது” என்று அறிவுரை கூறியுள்ளார். இதனைக் கேட்டு எரிச்சலான பொன்வண்ணன் எதிர்த்து பேசவே, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றி, தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து முத்துக்குமார் உசிலம்பட்டி காவல்நிலையத்திற்கு போன் செய்து போலீசாரிடம் நடந்ததைக் கூறி, அவர்களை டாஸ்மாக் வருமாறு அழைத்தார்.

அதற்குள் அங்கிருந்த பொன்வண்ணனும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் வந்த பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின்னர் அங்கு போலீசார், அவர்கள் விட்டுச் சென்ற இரு பைக்குகளை ஸ்டேசன் எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, டாஸ்மாக் அருகே இருந்த தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளார். தங்களது பைக்குகளை போலீசார் எடுத்துச் சென்று விட்ட நிலையில், இதற்கெல்லாம் காரணமான காவலர் முத்துக்குமாரை தேடி மீண்டும் டாஸ்மாக் வந்தார் பொன்வண்ணன்.

முத்துக்குமார் தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருப்பதை அறிந்து, அங்கே சென்ற பொன்வண்ணன், அவரை கீழே தள்ளி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். முத்துக்குமாருடன் உடனிருந்த ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கொலைக் குற்றவாளியான பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி காவல்நிலைய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் மீது ஏற்கெனவே போக்சோ, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரிந்தது.

இந்நிலையில், இன்று பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலைத் தொடர்ந்து தேனி போலீசாருடன் சேர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொன்வண்ணனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கினர்.

அப்போது, போலீசாரை பார்த்த பொன்வண்ணன் கம்பம் மெட்டு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியின் அருகே தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்றுள்ளனர். அதில், சுந்தரபாண்டி என்ற போலீசார் மற்றும் கொலைக் குற்றவாளி பொன்வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பொன்வண்ணனை மற்றும் சுந்தரபாண்டி என்ற போலீஸ்காரர் ஆகிய இருவருக்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த பொன்வண்ணன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முத்துக்குமார் உடலுக்கு மரியாதை! ganja seller ponvannan shot by madurai police

இதற்கிடையே கொலையான காவலர் முத்துக்குமார் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் தலைமையில் காவல்துறையினர் அரசு மரியாதை செய்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முத்துக்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அறிவுரை கூறிய போலீஸ்காரரை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றவாளியை, போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share