கஞ்சா, மது போதையில் இருந்த இளம்பெண் நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசாரை எட்டி உதைத்து பீர் பாட்டிலால் தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மூன்றாவது நகர காவல் நிலைய ஏ.எஸ்.ஐ சத்தியநாராயணா தலைமையில் போலீசார் நேற்று(டிசம்பர் 15) நள்ளிரவு ரோந்து சென்றனர்.
அப்பொழுது விசாகப்பட்டினம் ஆர் கே கடற்கரை சாலையில் சென்றபோது இளம் பெண் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி பீர் குடித்துக் கொண்டிருந்தார்.
போதையில் இருந்த இளம் பெண்ணை போலீசார் விசாரிக்க சென்ற போது போலீசாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்.
அந்த பெண்ணிடம் மது போதை குறித்த அளவை தெரிந்து கொள்வதற்காக பரிசோதனை செய்ய முயன்ற போலீசாரை எட்டி உதைத்து பீர் பாட்டிலால் தாக்கினார்.
இதில் அருகில் இருந்த கோவிந்த் என்ற இளைஞருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் போலீசாரை தனது காதலனிடம் கூறி சாலையில் ரோந்து செல்ல விடாமல் செய்வதாக சவால் விடுத்தார்.

நள்ளிரவில் இளம்பெண் கஞ்சா மற்றும் மது போதையில் கண்மூடித்தனமாக போலீசாரை திட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இளம் பெண் தாக்கியதில் காயம் அடைந்த கோவிந்த் என்ற இளைஞரிடம் புகார் பெற்றுக் கொண்ட போலீசார், பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது,
மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, போலீசாரை தாக்கியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலை.ரா
