தமிழ் சினிமாவில் பட்ஜெட், தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள் அடிப்படையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிப்பில் லியோ, சூர்யா நடிப்பில் கங்குவா ஆகிய மூன்று படங்களும் சுமார் 1200 கோடி ரூபாய் வணிக மதிப்புள்ளவையாகும்.
மூன்று நடிகர்களின் நடிப்பில் ஏற்கனவே வெளியான படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வெற்றியை தவற விட்ட படங்களாகும்.
இருந்தபோதிலும் இவர்களது சம்பளம் குறையவில்லை படத்தின் பட்ஜெட் அதிகரித்து உள்ளது. மூன்று நடிகர்களுக்குமே தங்களது படத்தின் வெற்றி முக்கியம் என்பதால் லியோ படத்திற்கான ப்ரமோஷன் படம் அறிவிக்கப்பட்டது முதல் செய்யப்பட்டு வருகிறது.
டிரைலர், பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த இரண்டு படங்களையும் ஒரு கிளிம்ஸ் வீடியோ, ஒரு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு ஓரங்கட்டியுள்ளது ’கங்குவா’ திரைப்படம்.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று (ஜூலை 23) நள்ளிரவு 12.01க்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களில் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
ஒரு போர்வீரன் தோற்றத்தில் குதிரை மீது வாளை ஏந்தியபடி சூர்யா அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இராமானுஜம்
வெளுத்துவாங்க போகும் மழை: வானிலை மையம் தகவல்!
அவதூறு பேச்சு: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது!
