ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த தோல்வியால் தத்தளித்து வருகிறது. ganguly mass words on dhoni captainship at 43 age
இந்த நிலையில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தொடரில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை தோனியே மீண்டும் ஏற்பார் என்றும் நேற்று அணி நிர்வாகம் அறிவித்தது..
அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 11) இரவு நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.
2023 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணி ஐந்தாவது சாம்பியன் பட்டம் வென்ற கையுடன், கேப்டன் பதவியை துறந்த தோனி, இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு இன்று அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த நிலையில் தோனியின் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறிய கருத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அவர், “எம்.எஸ். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்றால், அவர் அந்த அணியின் கேப்டனாக இருக்க வேண்டும். ஏனென்றால், கேப்டனாக தோனி இருந்தால் அவர் ஒரு வித்தியாசமான பீஸ்ட் ஆக இருப்பார்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “தோனி இன்னும் சிக்ஸர்கள் அடிக்க முடியும். அதை அனைவரும் பார்த்தோம். அவருக்கு 43 வயது. 2005ல் நான் பார்த்த அதே தோனியை இப்போது எதிர்பார்க்க முடியாது. எனினும் அவருக்கு இன்னும் மேட்ச் வின்னராக ஆக கூடிய ஆற்றல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று கங்குலி கூறினார்.
இந்த கருத்தை, தோனி நேற்று கேப்டனாக அதிகாரப்பூர்வமாக சென்னை அணி நிர்வாகம் அறிவிப்பதற்கு சற்று முன்பு கங்குலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.