கடந்த மார்ச் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. gaikwad highlights key issues
இதனை தொடர்ந்து நேற்று (மார்ச் 30) கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று போட்டி முடிந்ததும் சென்னை அணி தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. ஒருவேளை நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக ஆடியிருந்தால், நிச்சயமாக ஆட்டம் மாறியிருக்கும்.
சரியாக ஃபீல்டிங் செய்யாததால் 8-லிருந்து 10 ரன்களை இழக்க நேரிட்டது. ஃபீல்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நூர், கலீல் அகமது, ஜடேஜா ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். நான் மிடில் ஓவர்களில் இறங்கினால் நன்றாக இருக்கும், ராகுல் திரிபாதி தொடக்கத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எண்ணினோம். ஆனால், அது சரியாக அமையவில்லை. இனிமேல் நான் தொடக்கத்தில் ஆட முயற்சிப்பேன்” என்று தெரிவித்தார். gaikwad highlights key issues