ககன்யான் சோதனை கலன் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. காலை 8 மணிக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணிக்கு சோதனை கலன் விண்ணில் ஏவப்பட்டது.
சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டிக் கொண்டாடினர். தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “ககன்யான் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ககன்யான் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த சோதனையின் நோக்கம்.
ராக்கெட்டின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமாக உள்ளது. ராக்கெட்டில் இருந்து சோதனை கலன் பிரிந்தது, கடலில் விழுந்தது உட்பட அடுத்தடுத்த செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடலில் விழுந்த சோதனை கலனை கடற்படையினர் கொண்டு வந்த பிறகு அதில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்று சோம்நாத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தொடர்ந்து விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!
வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமிக்கு திரும்பியது ககன்யான் சோதனைக் கலன்!
