ஜி20 தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!

Published On:

| By Selvam

ஜி20 தலைமை பொறுப்பை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.

ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வகித்து வருகிறது.

ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவு, எரிசக்தி, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், உலகளாவிய கடன் பாதிப்புகள் உள்ளிட்ட பல முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய யூனியன் ஜி20 குழுவில் புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டது. ஜி20 மாநாடு இன்று நிறைவுபெற்றது.

அடுத்த ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார். முன்னதாக டெல்லி காந்தி நினைவிடத்திற்கு சென்று உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

செல்வம்

“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும்” – விஷால்

சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share