“ஜி20 மாநாடு பிரகடனத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை” – உக்ரைன்

Published On:

| By Selvam

ஜி20 தலைவர்களின் பிரகடனத்தை பார்க்கும் போது அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரைன் செய்தி தொடர்பாளர் ஓலக் நிகோலன்கா தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா மோதலை இந்தியா கண்டிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனங்கள் இன்று நிறைவேற்றப்பட்டது. இதில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த பிரகடனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

உக்ரைன் ரஷ்யா போர் குறித்த பிரகடனத்தில், “பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம், அமைதி, ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆதரிக்கும் அனைத்து தொடர்புடைய  ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது ஜி20 மாநாட்டில் இந்தியா கடுமையான எதிர்ப்புகள் எதையும் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து உக்ரைன் செய்தி தொடர்பாளர் ஓலக் நிகோலன்கா கூறும்போது, “உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடர்பான G20 தலைவர்களின் பிரகடனத்தை பார்க்கும் போது அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. உக்ரைன் தரப்பிலிருந்து ஒருவரை அனுமதித்திருந்தால் எங்கள் தரப்பு நியாயத்தை பதிவு செய்ய வசதியாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

அமைச்சர் பொன்முடி வழக்கு: ஜெயக்குமார் மனு!

“அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜி20 மாநாட்டில் பிரகடனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share