குறையும் மின் துண்டிப்புப் பிரச்சினை!

Published On:

| By Balaji

இந்தியாவில் சராசரி மின் துண்டிப்பு நேரம் மே மாதத்தில் 5 மணி நேரம் 28 நிமிடங்களாகக் குறைந்துள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1,378 நகரங்களிடையே மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இந்தியாவில் மே மாதத்தில் சராசரி மின் துண்டிப்பு நேரம் 5 மணி 28 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. 2018ஆம் ஆண்டின் மே மாதத்தில் இதன் அளவு 7 மணி 52 நிமிடங்களாக இருந்தது. மின் இணைப்பு துண்டிப்புப் பிரச்சினையை அதிகளவில் குறைத்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு மின் துண்டிப்புக் காலம் 8.43 மணியிலிருந்து 2.48 மணியாகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் 17.53 மணியிலிருந்து 26 நிமிடங்களாகவும், கேரளாவில் 7.52 மணியிலிருந்து 1.31 மணியாகவும் குறைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் கர்நாடகா தவிர்த்து அனைத்து மாநிலங்களும் தங்களது மின் துண்டிப்பு கால அளவை மே மாதத்தில் குறைத்துள்ளன. தமிழகம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் மின் துண்டிப்பு கால அளவு குறைந்த விவரங்கள் கிடைக்கவில்லை.

மத்திய அரசின் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம், மின் துண்டிப்பு காலம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் உச்சபட்ச மின்சாரத் தேவை 6.7 சதவிகிதம் உயர்ந்து 1,76,381 மெகா வாட்டாக இருந்துள்ளது. அதேபோல, மின் உற்பத்தி ஆலைகளின் உற்பத்தி அளவு மே மாதத்தில் 5.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

ADVERTISEMENT

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share