குஜராத் திரும்பிய ஹ்ருத்திக் பட்டேல்!

Published On:

| By Balaji

குஜராத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் விதித்த ஆறு மாதக் கெடு நேற்றோடு முடிந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன்புடைசூழ ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குஜாராத்மாநில எல்லைக்குள் வந்தடைந்தார் ஹ்ருத்திக் பட்டேல்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து புறப்படும் முன்பு உதய்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ஹிர்திக் படேல் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒருவேளை என்னை பாஜக அரசு கொல்ல முடியவில்லை என்றால் அவர்கள் என்னை 14 வருடம் சிறையில் தள்ளுவார்கள். நான் சிறையில் இருந்து வெளியே வரும்போது எனக்கு 36 வயது ஆகி இருக்கும் இருப்பினும் என் சமுதாய மக்களுக்காக நான் சேவை செய்ய எனக்கு போதிய கால அவகாசம் இருக்கும். அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் குலப்சந்திடம் என்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் குலப்சந்த் போலி என்கவுண்டர் மூலம் என்னை கொலை செய்ய முயற்சிக்கலாம். இதற்காக அவர்கள் சொராபுதீன் போலி என்கவுண்டரில் குற்றசட்டபட்ட காவல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர்” என்றார்.

ADVERTISEMENT

பின்னர் குஜராத் எல்லைக்குள் நுழைந்த படேலை ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கு இருந்து ஹிம்மாத் நகருக்கு சென்று படேல் சமுதாய மக்களின்ஊர்வலத்தில் பங்கேற்றுஉரையாற்றினார். ஊர்வலத்தில் பேசிய படேல், உரியநீதியை பெறுவதற்காக நான் எப்போதும் என சமுதாயமக்களுக்காக போராடுவேன் என்றார்.

தனது எதிர்கால திட்டம் குறித்து எழுப்பட்ட கேள்விக்குபதிலளித்த படேல், “உரிய நேரத்தில் என்னுடையதிட்டங்களை செயல்படுத்துவேன். இப்போது அதுபற்றி என்னால் கூற முடியாது”என்றார்.

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாகவாழும் பட்டேல் சமூகத்தினர் தங்களை இதரபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடுவழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்குஹர்திக் படேல் தலைமை தாங்கினார். இவர் கடந்தஆண்டு அகமதாபாத்தில் நடத்திய பேரணியில்வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடுநடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால்அம்மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து, ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். 9 மாதங்களுக்கு பின்னர்நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஹர்திக் படேல், 6 மாதங்களுக்கு குஜராத்தில் நுழையக் கூடாது எனகுஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தஉத்தரவின் பேரில், குஜராத்தை விட்டு வெளியேறிராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ்முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ஹர்திக் படேல்தங்கியிருந்தார்.

ADVERTISEMENT

ஹிர்திக் படேல் குஜராத்திற்கு வந்ததை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர் விஜய் ரூபனி, “நாங்கள் எப்போதுமே அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இன்று கூட நாங்கள் அவரின் ஊர்வலத்திற்கு எந்தவித தடையுமின்றி அனுமதிவழங்கியுள்ளோம்”என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share