விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காளி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
காளி படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
அமெரிக்காவில் டாக்டராகப் பணியாற்றும் விஜய் ஆண்டனிக்குச் சிறு வயது சம்பவங்கள் கனவுகளாக வர இந்தியா திரும்புகிறார். தனது கிராமத்துக்கு வந்த பின் நடைபெறும் சம்பவங்கள் ட்ரெய்லரில் இடம்பெறுகின்றன. இதற்கு முந்தைய விஜய் அண்டனி படங்களைப் போலவே இதிலும் அம்மா சென்டிமென்ட் பாடல் இடம்பெற்றுள்ளது. யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இறுதிகட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது, விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் [ட்ரெய்லரை](https://www.youtube.com/watch?v=8msycIZUEdY) வெளியிட்டுள்ளார்.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து தனது ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரித்து வருகிறார்.
