திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. Full Moon Today Special Trains
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவ்து வழக்கம். இன்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று ஜூன் 10-ந் தேதி காலை 9.25 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்கள்: வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை.