எஃப்டிஎக்ஸ் செஸ் போட்டி : முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி!

Published On:

| By Jegadeesh

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ போட்டியில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்.

முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை எதிர்கொண்டார் 17 வயது பிரக்ஞானந்தா. 4 ஆட்டங்களை கொண்ட முதல் சுற்றில் 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

இதற்கு முன்பு இவர் ஃபிரோஜாவுக்கு எதிராக விளையாடிய எந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றது கிடையாது. இந்நிலையில் முதல்முறையாக ஃபிரோஜாவை தோற்கடித்துள்ளார்.

இரண்டாவது சுற்று இன்று (ஆகஸ்ட் 16 ) நடைபெற உள்ளது. இதில் பிரக்ஞானந்தா அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கிய எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ போட்டி ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share