வெறும் தோசைக்குப் பதிலாக வித்தியாசமான தோசை என்றால் யார்தான் வெறுப்பார்கள்? அப்படிப்பட்ட தோசையைச் செய்ய இந்த ரெசிப்பி உதவும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த தோசையை அடிக்கடி செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை? Fruit Dosa Recipe in Tamil
வாழைப்பழம் – 5
சர்க்கரை – 50 கிராம்
அரிசி மாவு – ஒன்றரை டீஸ்பூன்
மைதா – ஒரு டீஸ்பூன்
முந்திரி, நெய் – சிறிதளவு.
எப்படிச் செய்வது?
வாழைப்பழத்தை தோல் நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். பிறகு, அரிசி மாவு, மைதா சேர்த்துக் கலக்கவும். இத்துடன் நெய்யில் பொரித்த முந்திரியை சேர்த்துக் கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் நெய் சேர்த்து சூடாக்கி, கலந்த மாவை சிறுசிறு தோசையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.