தமிழ்நாட்டில் இன்று செப்டம்பர் 1-ந் தேதி முதல் 38 டோல்கேட்களில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட நகரங்களில் 3 ஆண்டுகளுக்குப் பின் டீ கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று செப்டம்பர் 1-ந் தேதி விக்கிரவாண்டி உள்ளிட்ட 38 டோல்கேட்களில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வானது ரூ.5 முதல் ரூ.395 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
வாகன வகை
கட்டண வகை
புதிய கட்டணம் (₹)
பழைய கட்டணம் (₹)
கார், ஜீப், பயணிகள் வேன்
ஒரு வழி
105
105
பல முறை பயணம்
160
155
மாதாந்திர
3,170
3,100
இலகு ரக வாகனம்
ஒரு வழி
185
180
பல முறை பயணம்
275
270
மாதாந்திர
5,545
5,420
டிரக், பேருந்து
ஒரு வழி
370
360
பல முறை பயணம்
555
540
பல அச்சு வாகனம்
ஒரு வழி
595
580
பல முறை பயணம்
890
870
மாதாந்திர
17,820
17,425
டீ, காபி விலை உயர்வு
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் டீ, காபி, பூஸ்ட், ராகிமால்ட் உள்ளிட்டவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீ தூள், காபி தூள் உள்ளிட்டவை விலை அதிகரிப்பால் 3 ஆண்டுகளுக்கு பின்னர் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிளாஸ் டீ விலை ரூ12-ல் இருந்து ரூ15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; ஒரு கிளாஸ் காபி விலை ரூ15-ல் இருந்து ரூ18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.