சியான் 62 : மீண்டும் கிராமத்திற்கு திரும்பிய விக்ரம்

By christopher

|

Published on 29 Oct 2023, 7:17 AM

vikram again muscles up for chiyaan 62

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய உடல் எடையை குறைத்து தோற்றத்தையே முழுமையாக மாற்றி, அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தங்கலான் படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும், தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 குறித்த அப்டேட்  நேற்று (அக்டோபர் 28) வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமாரையும் அனைவரும் பாராட்டி இருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 படத்தை  இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். சியான் 62 படம் குறித்த அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாக தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

சியான் 62 படத்தை HR பிச்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு கிராமத்தில் மளிகை கடை நடத்தும் ஒரு குழந்தையின் தந்தையாக விக்ரம் வருகிறார் என்பது போல் காட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

என்ன சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியலையா? இதோ சில உணவுகள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel