ADVERTISEMENT

செம்ம குட்நியூஸ்! மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் செப்.11 முதல் 8 பெட்டிகள் கூடுதலாக இணைப்பு!

Published On:

| By Mathi

Madurai–Bengaluru Vande Bharat Express

தமிழகத்தின் மதுரை- கர்நாடகாவின் பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு நாளை செப்டம்பர் 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 7 AC Chair Cars, 1 AC Executive பெட்டிகள் (Coaches) இணைக்கப்பட்டுள்ளன. மதுரையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (Train No.20671) திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும். வழக்கமான ரயில் கட்டணங்களை விட இதில் 3 மடங்கு கட்டணம் அதிகம்.

ADVERTISEMENT

தற்போது இந்த வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதியதாக 7 AC Chair Cars மற்றும் 1 AC Executive பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 14 AC Chair Cars , 2 AC Executive பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இனி மதுரை- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். 16 பெட்டிகளுடனான மதுரை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் இயக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share