ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 17-வது ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாஃப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு 6 புதிய கேப்டன்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதனால் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் 1௦ கேப்டன்களுக்கும் இந்த தொடரில் ஒரு ஒற்றுமை இருப்பது தெரியவந்துள்ளது. அது என்னவென்றால் நடப்பு தொடரில் எந்த அணியின் கேப்டனுமே, ஐபிஎல் கோப்பைக்கு சொந்தக்காரர் இல்லை என்பது தான்.
CSK அணியின் புதிய ‘கேப்டன்’ யாருன்னு பாருங்க!
இதில் ஹர்திக் பாண்டியா ஒருமுறை ஐபிஎல் கோப்பையினை வென்றிருக்கிறார். என்றாலும் அது குஜராத் அணியின் கேப்டனாக தான் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இல்லை. இதனால் கோப்பை இல்லாமல் இருக்கும் இந்த 1௦ கேப்டன்களில் இந்தாண்டு கோப்பையினை வசப்படுத்த போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு நடுவில் ஐபிஎல் கோப்பையோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தில், கோப்பைக்கு மிக அருகில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சென்னை கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் நால்வரும் தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் விளையாடுவார்கள் என ஆரூடம் கூறி வருகின்றனர். அவர்களின் ஆரூடம் உண்மையாகுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரம்.. அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த எஸ்பிஐ!
எடப்பாடி தேர்ந்தெடுத்த அதிமுக வேட்பாளர்களின் பின்னணி!
அனுஷ்கா 50 : முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு.. இயக்குநர் இவரா?