IPL Auction 2024 : வரும் 2024 ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 6 வீரர்களை வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலம் இன்று துபாயில் நடந்து வருகிறது. அதில் கையில் ரூ.31.4 கோடியுடன் பங்கேற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆரம்பத்தில் ஆல்ரவுண்டர்களை குறிவைத்த நிலையில், அதிகபட்சமாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு வாங்கியது.

தொடர்ந்து அதே அணியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா ரூ. 1.8 கோடிக்கும், இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ரூ. 4 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

பின்னர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம் அதிரடி பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது.
https://twitter.com/ChennaiIPL/status/1737113632088154515
இன்னும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஷூர் ரஹ்மானை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.
https://twitter.com/ChennaiIPL/status/1737133669402452462
கடைசியாக தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் பேட்டர் அவினாஷ் ராவ் ஆரவெல்லியை ரூ.20 லட்சத்துக்கு வாங்கி தனது ஏலத்தை முடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!
தோனி (கேப்டன்) மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷக்யா ரஹானே , மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஐயோ இவரா?”: மினி ஏலத்தில் பெங்களூர் அணி கொடுத்த ரியாக்சன் வைரல்!
