‘பதான்’ முதல் ’பகாசூரன்’ வரை: ஓடிடி ரிலீஸ்!

Published On:

| By Jegadeesh

தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பதான்

ADVERTISEMENT

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ’பதான்’ இந்தித் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இத்திரைப்படம், மார்ச் 22 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாக உள்ளது. பாலிவுட் மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.

செங்களம்

ADVERTISEMENT

கலையரசன், வாணி போஜன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ’செங்களம்’ இணையத்தொடர் மார்ச் 24 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அபி & அபி எண்டர்டெயின்மன்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

சோர் நிகல் கே பாகா

ADVERTISEMENT

யாமி கெளதம் மற்றும் சன்னி கௌஷல் நடித்த ‘சோர் நிகல் கே பாகா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

புருஷா ப்ரேதம்

’புருஷா ப்ரேதம்’ மலையாள திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் மார்ச் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமான தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார்.

தி நைட் ஏஜென்ட்

கேப்ரியல் பாஸோ நடித்த ’தி நைட் ஏஜென்ட்’ தொடரை 24 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரியை மையமாக வைத்து திரில்லர் தொடராக ‘தி நைட் ஏஜென்ட்’ உருவாகி உள்ளது.

பகாசூரன்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது.

பவர் ப்ளே…டாப் ஆர்டர்: இந்திய அணிக்கு ஜாகீர் கான் டிப்ஸ்!

பெண்களுக்கு மதிப்பில்லை: அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share