முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் இன்று (அக்டோபர் 10) காலமானார்.
சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கோபாலபுரத்துக்கு சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அங்கு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து அவரது கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர் பிரசாந்த், பாஜக பிரமுகர்கள் சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானம் : ராமதாஸ் ஐடியா!
ரத்தன் டாடா மறைவு: டவர் ஆஃப் சைலன்ஸ்… பார்சிக்களின் வித்தியாசமான இறுதிச்சடங்கு!