இன்று (செப்டம்பர் 27) திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மெய்யழகன்
நடிகர்கள் கார்த்தி – அரவிந்த்சாமி, நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. 96 படத்தின் வெற்றிக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஹிட்லர்
ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மதுரை அருகே ஒரு மலைப்பகுதியில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டம் என் கையில்
நடிகர் சதீஷ், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சட்டம் என் கையில் திரைப்படமும் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
பேட்ட ராப்
எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா, ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தேவரா
ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ தெலுங்கு படமும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ்
சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி அமேசான் பிரைமிலும், அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ ஜீ 5 ஓ.டி.டி தளத்திலும், இனியா, முக்தா கோட்சே, ராகுல் தேவ் நடித்துள்ள காபி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும் இன்று வெளியாகவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா