ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதன்படி இந்த வாரம் எந்தெந்த ஒடிடியில் என்னென்ன புதிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன என்பது குறித்து இங்கு காணலாம்.
மெய்யழகன்
’96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இன்று (அக்டோபர் 25) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
கடைசி உலகப் போர்
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள கடைசி உலகப் போர்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதனையடுத்து இன்று அமேசான் ப்ரைம் மற்றும் டெண்டுகோட்டா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.
கோழிப்பண்ணை செல்லத்துரை
சீனு இராமசாமி இயக்கத்தில் ஏகன் நடிப்பில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதனையடுத்து சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
ஹிட்லர்
தனசேகரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியானது ‘ஹிட்லர்’. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் இன்று வெளியாகிறது.
ஐந்தாம் வேதம்
90களின் பிரபலமான ‘மர்மதேசம்’ தொடரின் இயக்குநரான நாகா ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸை இயக்கியுள்ளார். சாய் தன்ஷிகா நடித்துள்ள இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கிளாஸ் மேட்ஸ்
ஷரவணசக்தி இயக்கி நடித்துள்ள ‘கிளாஸ் மேட்ஸ்’ திரைப்படம், சிம்ப்ளி சவுத் ஓ.டிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
டோ பட்டி
ஷஷாங்கா சதுர்வேதி இயக்கத்தில் கஜோல் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள டே பட்டி என்ற பாலிவுட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இன்று நேரடியாக ரீலீஸ் ஆக உள்ளது.
டோன்ட் மூவ்
ஆடம் ஷிண்ட்லர் மற்றும் பிரையன் நெட்டோ ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள டோன்ட் மூவ் என்ற ஹாலிவுட் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
லப்பர் பந்து
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் தீபாவளி ரிலீசாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அட்டக்கத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற ‘லப்பர் பந்து’ படம் வரும் 31 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்த ஆண்டு தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
